புதன், 13 ஜனவரி, 2010




நண்பர்களே

,                             இந்த பொங்கலை யோசிக்கும் நாளாக மாற்றுவோம், பொங்கல் கொண்டாட இன்றைய சமூகம் தகுதி உள்ளவர்களா ? பொங்கலுக்கு தேவையான அடிப்படை குணங்கள் என்ன ? நேரம் கடந்து விட்டது. பூமியின் பசுமையை, உணவின் செழிப்பை கொண்டாடினார்கள் நம் முன்னோர்கள் .இன்று பிட்சாவும் பர்கரும் பாட்சாவும் ,அடுக்கு மாடிக்கட்டிடங்களும் , ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களின் அதிக பிரசுரமும் எதை எதை நம்மிடமிருந்து தொலைத்து விட்டதோ அது தான் பொங்கல் கொண்டாட தேவையான அடிப்படை குணங்கள் . ஒரு நிமிடம் யோசியுங்கள் . என்ன செய்யலாம். பொங்கல் கொண்டாட இயலவில்லை என்றால் மனிதக்குலம் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் .. சிந்தியுங்கள். நம் குழந்தைகளுக்கு தேவையற்ற வரலாற்று புனைவுகளை கட்டாயப்படுத்தி கற்றுக் கொடுக்கும்பொழுது ஒரு துளி பொங்கல் அறிவையும் கொடுப்போம் ...........

பசுமை மீண்டும் பொங்கும் பொங்கல் நாளுகளுக்காக உழைப்போம்























பொங்கலோ பொங்கல் என்றோம் 
பொங்கட்டும் இன்பம் என்றோம் ,


பொங்கும் கழனிகள் இல்லையேல் 
ஆடும்  தும்பிகள் இல்லையேல்
தேன்தேடும் பூச்சிகளில்லையேல் 
மண் பொங்க வெண் பொங்கல் இல்லையே   

மலைகளுண்டு மண் காக்கும் மரங்களில்லை
மேகங்கள்  கூடுக்கூட்ட இலைகளில்லை 
மழை  இறங்க  தாழ்வரையில் புல்கொடியில்லை 
மனம் நிறைந்து வரவேற்கும் பறவைகளில்லை

வான் வரைந்த வானவில்லின் நிறங்களில்லை
வண்டாடும் மல்லிகையின் முற்றங்களில்லை  
வேர்வையிலும் மண் மணக்கும் மனிதர்களில்லை
விருந்தாகும் மருந்தாகும் விதைகளுமில்லை 


சூரியனை உண்டு வாழ முடியவில்லை
சந்திரனை பார்க்க நீல வானமில்லை
விஷம் நிறைந்த பூமிக்கும்  உயிரில்லை 
கடைசி உயிர் மனிதனுக்கோ பார்வையில்லை

பொங்கலோ பொங்கல் என்கிறோம் 
பொங்கட்டும் இன்பம் என்கிறோம் 
--------------------------------------------------------

4 கருத்துகள்:

  1. உங்களைப் போன்ற இயற்கை நேசமும்,சுற்றுச் சூழல் ஆர்வமும் வையமெங்கும் வளர்ந்து தழைத்தால் மண் மாண்புறும்.
    அதற்குச் சிறியதொரு பொறி....உங்கள் இடுகை.
    தீப்பொறியான அறச் சீற்றம் கொண்ட இந்த அக்கினிக் குஞ்சு மண்ணின் மாசுகளைக் களையட்டும்;மனித மன அழுக்குகளைக் கழுவித் தூய்மை செய்யட்டும்.அதற்கு ஒரு உந்துதலாகவாகவேனும் அமையட்டும்.
    வாழ்த்துக்கள்.
    பிரியமுடன்,
    எம்.ஏ.சுசீலா

    பதிலளிநீக்கு
  2. பொங்கல் விழா, தைத்திருநாள், தமிழர் புத்தாணடு தினம், தமிழர் திருவிழா என்றெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதை விடுத்து, நம் பாரம்பரியமான விவசாயத்தை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது. விளைநிலங்கள் வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளுக்கான நிலங்களாகவும் மாறிவிட்ட நிலையில், நிலத்தடி நீர் குறைந்து வருவது குறித்தும், அடிப்படை உணவுத்தேவையில் தன்னிறைவு பெறுவது பற்றியும் யோசிக்க வைக்கிற சிந்தனையூட்டும் பதிவு. வாழ்த்துகள் தேவி.
    000
    http://neelabhumi.blogspot.com/2010/01/blog-post.html ல் இப்பதிவை இணைத்திருக்கிறேன்.

    - பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  3. www.tamilish.com ல் இப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

    - பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு